சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீடொன்றில் சராயம், பியர் விற்பனை செய்யப்பட்ட நிலையில், குறித்த வீடு முற்றுகையிடப்பட்டு 30 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
போயதினமான நேற்று (05) சாவகச்சேரி மதுவரி திணைக்களத்திற்கு அருகில் வீடொன்றில் மதுபானம் விற்பனை செய்யப்பட்ட நிலையில், யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
அத்துடன், அதிகளவான சராயப் போத்தல்கள், பியர்கள் என்பனவும் மீட்கப்பட்டுள்ளன.
