யாழ்ப்பாணம் – கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள், சிவில் சமூகங்கள் இணைந்து ஆரம்பித்திருக்கும் வடக்கிலிருந்து கிழக்கு நோக்கி என்ற மாபெரும் போராட்டம் தேராவில் மாவீரர் துயிலுமில்லத்திலே ஈகை சுடர் ஏற்றி அகவணக்கம் செலுத்தப்பட்டு மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது.
“மாவீரர்கள் எங்களுடைய தேசிய வீரர்கள், தமிழினத்திற்காக உயிர் தியாகங்களினை செய்துள்ள மாவீர செல்வங்களினை தமிழ் மக்கள் அனைவரும் எப்பொழுதும் போற்றுகின்றனர்.
அவ்வாறான மாவீரர்களுடைய வித்துடல்கள் புதைக்கப்பட்டுள்ள புனித பூமி. அவ்வாறான புனிதர்களை மாவீரர் நாளிலே அவர்களிற்குரிய அக மற்றும் வீர வணக்கத்துடன் அஞ்சலிகளினை செலுத்துகின்ற அதே நேரம் வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்திலிருக்கின்ற அனைத்து மாவீரர் துயிலுமில்லங்களும் தமிழ் மக்களிடம் ஒப்படைக்கப்படுத்தல் வேண்டும்.
ஒவ்வொரு மாவீரர் துயிலுமில்லத்தினதும் ஏற்பாட்டுக் குழுக்கள் அவற்றின் பாராமரிப்புகள் மற்றும் செயற்பாடுகளினையும் முன்னெடுக்கின்றார்கள் என்பதனை வலுயுறுத்துகின்றோம” என வேலன் சுவாமிகள் இதன்போது தெரிவித்தார்.
