தமிழ்தேசிய கூட்டமைப்பின் ஒற்றுமையை குலைத்தவர்கள் தமிழரசுக் கட்சி இல்லை என்றும் ஆனால், தமிழ் மக்கள் மத்தியில் பொய்யான விடயம் பரப்பப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
அம்பாறை மாவட்டத்தின் ஆலையடிவேம்பு பிரதேச சபைக்கான தேர்தலில் தமிழரசுக் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நிகழ்வு நேற்று மாலை ஆலையடிவேம்பு பிரதேச சபை கலாசார மண்டபத்தில் நடைபெற்ற போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“உள்ளுராட்சி மன்ற தேர்தலில் எவ்வாறு போட்டியிடவேண்டுமென சில சிபாரிசுகளை செய்ததாகவும் ஆனால் அவை சிலருக்கு ஏற்புடையதாக இருக்கவில்லை.
ஆனால், அவர்கள் கூறியபடி தேர்தலை எதிர்கொள்ள தயாரானபோது அதனையும் அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை” என்றார்.
