பண்டத்தரிப்பு பிரதேசத்தின் பண்டத்தரிப்பு பொதுச்சந்தை உள்ளூராட்சி மன்றங்களிற்கான மூலோபாய LDSP நிதிமூலமாக நவீன மரக்கறி,மீன் சந்தை கடைகட்டிட தொகுதிகள் கொண்டதாக முதற்கட்டமாக 03கோடி ரூபா நிதியில் புனரமைக்கப்படவுள்ளது.
இதற்கான கள விஜயம் கடந்த 06/02/2023 அன்று வலி.தென்மேற்கு பிரதேசசபை தவிசாளர், வட்டார உறுப்பினர் ஜிப்பிரிக்கோ, பிரதேசசபை செயலாளர்,தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் அடங்கிய குழுவால் மேற்கொள்ளப்பட்டதுடன் வியாபாரிகளின் ஒத்துழைப்பின் அவசியம் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
பண்டத்தரிப்பு வட்டாரபிரதேசசபை உறுப்பினர் அருட்குமார் ஜோன் ஜிப்பிரிக்கோவின் நீண்டகால முயற்சியின் விளைவாக கடந்த வரவுசெலவு திட்ட கூட்டத்தில் அவரால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவை அடிப்படையாக கொண்டு இத்திட்டம் LDSP ஊடாக உள்வாங்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
