வடக்கில் இருந்து கிழக்கு நோக்கிய எழுச்சிப் பேரணியானது இன்று காலை திருகோணமலை வெருகலம்பதி சித்திரவேலாயுதர் சுவாமி ஆலயத்தில் இருந்து மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லையாக காணப்படும் கதிரவெளியை சென்றடைந்தது.
இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினத்தை ‘கறுப்பு தினம்’ என பிரகடனப்படுத்தி தமிழ் மக்களின் அரசியல் மற்றும் நில உரிமைகளை கோரி இப்பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
‘வடக்கும் கிழக்கும் தமிழர் தாயகம்,’ ‘விழவிழ எழுவோம்’ என்ற கோசத்துடன் பதாதைகளை கையில் ஏந்தியவாறும் சிகப்பு, மஞ்சள் நிற கொடிகளை கையில் ஏந்தியவாறும் வாகரை மாங்கேணி ஓட்டமாவடி வாழைச்சேனை ஆகிய வீதிகள் ஊடாக கிரான் ஆச்சிரமத்தினை வந்தடைந்து அங்கிருந்து மட்டக்களப்பு நகர் நோக்கி பேரணி சென்றடைந்தது.
