அரசாங்க நிறைவேற்று அதிகாரிகள் மற்றும் உள்நாட்டு இறைவரி திணைக்கள அதிகாரிகள் இணைந்து கொழும்பு கோட்டைக்கு அருகில் எதிர்ப்பு ஊர்வலத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் கொழும்பு கோட்டையை சூழவுள்ள பகுதியில் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது.
இந்நிலையில் குறித்த பகுதியின் பாதுகாப்பிற்காக தற்போது இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை இன்றையதினம் பல்வேறு தொழிற்சங்கங்கள் கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல பாகங்களிலும் போராடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
