உயர்தரப் பரீட்சை இடம்பெறும் காலப்பகுதியில் மின்வெட்டை அமுல்படுவதை தவிர்க்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
குறித்த மனு இன்று(11) மேன்முறையீட்டு நீதிமன்றில் அழைக்கப்பட்ட போது இவ்வாறு நிராகரிக்கப்பட்டுள்ளது.
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
