யாழில் இடம்பெற்ற சுதந்திரதின நிகழ்விற்கு எதிராக ஆர்ப்பாட்டம் மேற்க்கொண்ட நிலையில் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன், சட்டத்தரணி சுகாஷ் உட்பட 18 பேரும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்.பதில் நீதவானின் வாசல்தலத்தில் முன்னிலைப் படுத்தப்பட்ட நிலையில், 18 பேரையும் தலா 3 லட்சம் ரூபா ஆள் பிணையில் செல்ல நீதவான் உத்தரவிட்டார்.
நேற்று மதியம் யாழ்.மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் இடம்பெற்றது.
குறித்த போராட்டத்திற்கு நீதிமன்றம் ஊடாக பொலிஸார் தடையுத்தரவை பெற்றிருந்தனர். எனினும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் போராட்டம் மேற்க்கொள்ளப்பட்டது.
இதன் போது குறித்த பகுதியில் ஏராளமான பொலிஸார் குவிக்கப்பட்டு போராட்டத்தை தடுக்க முயற்சிகளை மேற்க்கொண்டனர்.
இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன், சட்டத்தரணி சுகாஷ் உட்பட 18 பேர் கைது செய்யப்பட்டு பதில் நீதிவான் முன்னிலையில் முற்படுத்தப்பட்ட நிலையில் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
