மேடம் – தடைபட்டிருந்த செயல்கள் நடந்தேறும். நீங்கள் எதிர்பார்த்த ஆதாயம் உண்டாகும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். வெளிவட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும்.
இடபம் – காலையில் இருந்து இழுபறியான வேலை மதியத்திற்குள் முடிவிற்கு வரும்.
வேலை வாய்ப்பிற்காக காத்திருந்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும்.
மிதுனம் – பிள்ளைகள் நலனில் அக்கறை அதிகரிக்கும். வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவுறும். மறைமுகத் தொல்லை விலகும். பெற்றோரின் ஆதரவால் உங்கள் தேவை நிறைவேறும்.
கடகம் – உங்கள் செயல்களில் மதியத்திற்கு மேல் பின்னடைவு ஏற்படும். அரசு பணிகளில் கவனம் அவசியம். நீங்கள் திட்டமிட்டிருந்த வேலைகளை மதியத்திற்குள் முடிப்பீர்கள். அதன்பின் செயல்களில் கவனம் தேவை.
சிம்மம் – காலையில் தாமதம் என்ற நிலை இருந்தாலும் அதன் பின் உங்கள் செயலில் வெற்றி கிடைக்கும். எதிர்பார்த்தவற்றில் ஆதாயமான நிலை உண்டாகும். உங்கள் எண்ணம் நிறைவேறும்.
கன்னி – காலையில் இருந்த நிலை மாறும். பொருள்களை கையாள்வதில் கவனம் தேவை.
கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர். குடும்பத்தினர் தேவைகளை நிறைவேற்றுவீர்.
துலாம் – மதியத்திற்கு மேல் உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
இழுபறியாக இருந்த வேலை நிறைவேறும். குழப்பத்தில் இருந்து விடுபடுவீர்கள்.
விருச்சிகம் – காலையில் இருந்து அலைச்சலும் செலவுகளும் ஏற்பட்டாலும் நன்மை உண்டு.
காலையில் நீங்கள் நினைத்ததை அடைவீர்கள். மதியத்திற்கு மேல் எதிர்பாராத நெருக்கடி உண்டாகும்.
தனுசு – வியாபாரத்தை விரிவு செய்யும் முயற்சியில் வெற்றி பெறுவீர்கள். திட்டமிட்டு செயல்பட்டு உங்கள் முயற்சிகளில் லாபம் காண்பீர்கள். எதிர்பாராத ஆதாயம் உண்டாகும்.
மகரம் – தடை பட்டிருந்த வேலை முடியும். வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும்.
செயல்களில் இருந்த சங்கடம் விலகும். பண வரவு தாராளமாக வரும் நாள்.
கும்பம் – இரண்டு நாட்களாக இருந்த நெருக்கடி மாறும். உங்கள் செயல் வெற்றியாகும்.
பல வகையில் முயற்சித்தும் இழுபறியாக இருந்த வேலையில் இன்று லாபம் உண்டாகும்.
மீனம் – உறவினர்கள் ஆதரவுடன் செயல் ஒன்றில் வெற்றி காண்பீர்கள். வியாபார இடத்தில் மகிழ்ச்சிக்குரிய சம்பவம் நடைபெறும். எதிர்பார்ப்பு நிறைவேறும்.
