உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான ஆரம்ப கட்ட வேலைகளை மேற்க்கொள்வதற்காக தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு திறைசேரி 100 மில்லியன் ரூபாவை வழங்கியுள்ளது.
தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் திறைசேரியினால் நிதி வழங்கப்பட்டுள்ளமையை உறுதிப் படுத்தியுள்ளார்.
திட்டமிட்டபடி மார்ச் -9 ஆம் திகதி தேர்தலை நடத்துவதற்கு திட்டிமிட்டுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அதன்படி, எதிர்வரும் 22,23 மற்றும் 24 ஆம் திகதிகளில் தபால் மூல வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
