மட்டக்களப்பில் குளத்தில் மூழ்கி நான்கு இளைஞர்கள் பரிதாபகரமாக உயிரிழந்துள்ள சம்பவம் இன்று (12) இடம்பெற்றுள்ளது.
கொக்கட்டிச்சோலை, களுகுந்தான்வெளி, கங்காணியர் குளத்தில் இவ்அவலச் சம்பவம் பதிவாகியுள்ளது.
கொக்கட்டிச்சோலை நாற்பதாம் வட்டைக்குளம் என்ற இடத்திற்கு நீராடச் சென்ற பாடசாலை மாணவர் குழுவொன்றின் நான்கு பேர் நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவர்களில் மாணவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதுடன் ஏனைய மூவரை தேடும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.
