யாழ்ப்பாண பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அத்தியடி பகுதியில் பெண் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பதிவாகியுள்ளது.
கணவனை பிரிந்து 55 வயதுடைய குறித்த பெண் ஒரு பெண் பிள்ளையுடன் வசித்து வந்த நிலையில். நேற்றிரவு அடித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குறித்த பெண்ணின் வீட்டிற்கு ஒருவர் நீண்டகாலமாக ஆடுகளுக்கு குழை வெட்ட மற்றும் வீட்டு வேலைகளுக்காக வருகை தருவதாகவும் நேற்று காலையும் அவர் வழமைபோல வருகை தந்து நேற்று இரவு வரை வீட்டில் வேலை செய்து கொண்டிருந்ததாகவும் இறந்தவரின் மகள் வீட்டுக்குள் இருந்ததாகவும் இருவரும் சண்டை பிடிக்கும் சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்தபோது வேலை செய்து கொண்டிருந்தவரை காணவில்லை எனவும் தாயார் இரத்தம் தோய்ந்த நிலையில் நிலத்தில் கிடந்ததாகவும் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையின் போது குறித்த நபர் மரக்கட்டை ஒன்றினால் பெண்ணை தலையில் தாக்கியதாக தெரியவந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதோடு தடயவியல் பொலிசார் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
