தலதா மாளிகை மற்றும் மகாநாயக்கர்களுக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் சமூக ஊடகங்களில் பதிவிடும் நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு அஸ்கிரிய பீடாதிபதி வரகாகொட ஞானரதன தேரர், மல்வத்து பீடாதிபதி திப்பொடுவாவே ஸ்ரீ சுமங்கல தேரர், கண்டி தலதா மாளிகையின் தியவதன நிலமே பிரதீப் நிலங்க தெல ஆகியோர் பொலிஸ்மா அதிபரிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
சில குழுக்கள் சமூக ஊடகங்கள் ஊடாக அடிப்படையற்ற மற்றும் தீங்கிழைக்கும் கருத்துக்களை பரப்பி வருவதாக பொலிஸ் மா அதிபருக்கும், அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடும் அனைவருக்கும் எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ்மா அதிபரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
