உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பிற்கு அனைத்து செயற்பாடுகள் தயாராகிவிட்டதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதனிடையே தபால் மூலம் வாக்களிப்பவர்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு விசேட அறிவுறுத்தல் ஒன்றினை வெளியிட்டுள்ளது.
உள்ளூராட்சித் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்பு 22, 23, 24 ஆகிய திகதிகளில் செலுத்த முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
குறித்த திகதிகளில் வாக்களிக்க முடியாமல் போனால், 28 ஆம் திகதி மாவட்ட தேர்தல் அத்தியட்சகர் முன்னிலையில் செலுத்தலாம் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
