உள்ளூராட்சி தேர்தலுக்கு முன்னர், நாட்டில் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்த சில குழுக்கள் சதி செய்வதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர குற்றம் சாட்டியுள்ளார்.
அடுத்த மாதம் 8 மற்றும் 9 ஆம் திகதிக்குள் இவ்வாறான சதிகளை செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
ஏழரை மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டதையும், இரண்டு மூன்று நாட்களாக மக்கள் வரிசையில் காத்திருந்ததையும் சிலர் மறந்துவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
