“உயிரிழந்தவர் மீண்டும் உயிருடன் வர அவர் என்ன கடவுளா? போர்க்களத்தில் இருந்து அவரின் சடலத்தை மீட்டு எரித்தோம். அதன்பின்னர் அவர் எப்படி உயிருடன் இருப்பார்?” என முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“பிரபாகரன் மட்டுமல்ல அவரின் மனைவி, மகள், மூத்த மகன், இளைய மகன் ஆகியோரும் இறுதிப் போரில் உயிரிழந்துவிட்டார்கள்.
மனநோய் பிடித்தவர்கள் பிரபாகரனின் பெயரைப் பயன்படுத்தி அரசியல் செய்ய முனைகின்ற அதேவேளை, அவர்களில் சிலர் பிரபாகரனை உயிர்ப்பிக்கவும் முயற்சிக்கின்றனர்.
இந்த மனநோயாளர்களின் கருத்துக்குப் பதிலளிப்பது எமக்குத்தான் வெட்கக்கேடு” என்றார்.
