மேடம் – உங்கள் முயற்சியில் இன்று தடை உண்டாகும். செயல்களில் நிதானம் தேவை.
பணியில் கூடுதல் கவனம் செலுத்துவதால் நெருக்கடி விலகும். எச்சரிக்கையுடன் செயல்படுங்கள்.
இடபம் – ஒரு முயற்சியை ஒத்தி வைப்பீர்கள். குடும்பத்தினர் தேவைகளை நிறைவேற்றுவீர்.
நண்பர்கள் ஆதரவால் உங்கள் முயற்சி லாபமாகும். எதிரி விலகிச் செல்வார்கள்.
மிதுனம் – வெளி வட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள்.
விரைந்து செயல்பட்டு ஒரு செயலை முடிப்பீர்கள். எதிர்பார்த்த பணம் வரும்.
கடகம் – எதிர்பார்த்த செய்தி வந்து சேரும். உறவினரால் நன்மை காண்பீர்கள்.
நீங்கள் நினைத்தது நிறைவேறும். திட்டமிட்டு செயல்பட்டு பிரச்னைகளை சரி செய்வீர்கள்.
சிம்மம் – குடும்பத்தில் செலவு அதிகரிக்கும். கவனமுடன் செயல்பட வேண்டிய நாள்.
உத்தியோகத்தில் சக பணியாளர்களும் மறைமுகமாக தொல்லை அளிப்பர். விழிப்புணர்வு தேவை.
கன்னி – சகோதரர்களால் உங்கள் முயற்சி எளிதாக நிறைவேறும். நேற்றைய பிரச்னை முடிவுறும்.
பணியிடத்தில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். கடன்களால் ஏற்பட்ட சங்கடம் நீங்கும்.
துலாம் – குடும்பத்தில் இளம் தம்பதியர் ஒருவரை ஒருவர் புரிந்து செயல்படுவீர்கள்.
நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். வேலைக்குரிய முயற்சியில் முன்னேற்றம் காண்பீர்கள்.
விருச்சிகம் – உங்கள் நினைப்பிற்கு மாறாக செயல்கள் நடைபெறும். அமைதியாக இருக்க வேண்டிய நாள். பணிபுரியும் இடத்தில் பொறுப்பு அதிகரிக்கும். ஒரு சிலருக்கு பணியாளர்களுடன் பிரச்னைகள் ஏற்படும்.
தனுசு – வரவை விட செலவு அதிகரிக்கும் என்பதால் கவனமுடன் செயல்படுவீர்கள்.
சக பணியாளர்களுடன் அனுசரித்துச் செல்வதின் மூலம் உங்கள் முயற்சி வெற்றி பெறும்.
மகரம் – புதிய நட்பின் வழியே உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். வரவுகளால் மகிழ்ச்சி உண்டாகும்.
எதிர்பார்த்த வருவாய் வரும். வெளி வட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும்.
கும்பம் – தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு விரும்பியதை அடைவீர்கள். உங்கள் முயற்சி பலிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பொறுப்புகள் உண்டாகும் நாள்.
மீனம் – நேற்றுவரை இருந்த நெருக்கடி விலகும். பழைய பிரச்னைகளுக்கு முடிவு காண்பீர்கள். பணியிடத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் நீங்கும். உங்கள் செல்வாக்கு உயரும்.
