பிரபாகரன் உயிருடன் உள்ளார் என்று பழ.நெடுமாறன் வெளியிட்ட செய்தியை போராளிகள் தம்மிடம் உறுதிப்படுத்தவில்லை என்றும், எனினும் பிரபாகரன் நலமுடன் இருந்தால் மகிழ்ச்சியே என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
ஈழ விடுதலைப் போர்க்களத்தில் பிரபாகரனோடு களத்தில் நின்ற போராளிகள் சிலர் இன்னமும் உலகின் பல நாடுகளில் இருக்கின்றனர்.
என்னிடம் தொடர்பில் இருக்கும் அத்தகைய போராளிகள் பழ.நெடுமாறன் வெளியிட்டுள்ள செய்தியை உறுதிப்படுத்தவில்லை என வைகோ மேலும் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
