கொழும்பு – பொரளை – சஹஸ்ரபுர பிரதேசத்தில், பொலிஸ் உத்தியோகத்தரின் துப்பாக்கி தவறுதலாக வெடித்தில், யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொரளை சஹஸ்ரபுர பிரதேசத்தில் பொலிஸ் அதிகாரிகள் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது இடம்பெற்ற இந்த சம்பவத்தில் ஹல்கஹவத்த பிரதேசத்தை சேர்ந்த 25 வயதுடைய யுவதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
