பளை மருத்துவமனையின் பொறுப்பதிகாரியாக மீண்டும் வைத்தியர் சி.சிவரூபன் இன்று (15) பொறுப்புக்களை ஏற்றுக்கொண்டார்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றினால் அன்மையில் பிணையில் விடுவிக்கப்பட்ட வைத்தியர் சிவரூபன் இன்று பளை மருத்துவமனையின் பொறுப்பதிகாரியாக மீண்டும் கடமையேற்கவுள்ளார்.
மருத்துவர் சிவரூபன் கடந்த 4 வருடங்களுக்கு முன்னர் பொலிஸாரால் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
