14 வயதுச் சிறுமிகளை காதல் என்ற போர்வையில் ஏமாற்றி வன்புணர்ந்த சம்பவங்கள் தமிழர் பகுதியில் இடம்பெற்றுள்ளதா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சி மற்றும் மன்னார் பகுதியிலேயே குறித்த சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
பாதிக்கப்பட்ட சிறுமிகள் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கிளிநொச்சியைச் சேர்ந்த 14 வயதுச் சிறுமியை ஹெரோய்ன் பாவனைக்கு அடிமையான 16 வயது இளைஞன் காதலித்துள்ளார்.
சிறுமியை வீட்டைவிட்டு வெளியே வருமாறு கூறியதைத் தொடர்ந்து சிறுமியும் வீட்டில் உள்ள எவருக்கும் தெரியாமல் 5 பவுண் நகையுடன் காதலனுடன் கொழும்புக்குச் சென்றுள்ளார்.
அங்கு குறித்த சிறுமியை காதலன் எனச் சொல்லப்படும் இளைஞனும் அவரது 3 நண்பர்களும் வன்புணர்ந்த பின்னர் சிறுமியை மீண்டும் கிளிநொச்சிக்குக் கொண்டு வந்து விட்டுச் சென்றுள்ளனர்.
இதேவேளை, மன்னாரில் 14 வயதுச் சிறுமியை காதலித்த இளைஞன் கிளிநொச்சிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கு அவரும் அவரது நண்பருமாக இணைந்து அந்தச் சிறுமியை வன்புணர்ந்துள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபரான காதலன் கைது செய்யப்பட்டதும் தவறான முடிவு எடுத்து உயிர்துறப்பதற்கு முயன்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
