மேடம் – பிறரின் ஆலோசனைகளைக் கேட்டு செயல்பட வேண்டாம். அதனால் பிரச்னை தோன்றும். உறவினர் ஒருவரால் சங்கடம் ஏற்படும். அனுசரித்துச் செல்வது நன்மை தரும்.
இடபம் – நீண்ட நாள் எண்ணம் நிறைவேறும். உங்கள் செல்வாக்கு உயரும் நாள்.
சவாலான வேலைகளை கூட சாதாரணமாக செய்து முடிப்பீர். நண்பர்கள் ஆதரவு அதிகமாகும்.
மிதுனம் – குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகளைத் தீர்த்து வைப்பீர். எதிரிகள் உங்களிடம் சரணடைவர். சொத்து விவகாரத்தில் நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த விவகாரம் முடிவிற்கு வரும்.
கடகம் – பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த முயற்சியில் ஈடுபடுவீர். எதிர்பார்த்த வரவு வரும். உங்கள் உதவியை எதிர்பார்த்து உறவினர் வருவார்கள். உங்கள் செல்வாக்கு உயரும்.
சிம்மம் – எதிர்பாராத பயணம் உண்டாகும் என்றாலும் அதனால் இலாபம் அடைவீர். நீங்கள் சந்திக்க நினைத்தவர்களை இன்று சந்திப்பீர்கள். நண்பர்களிடம் ஏற்பட்ட சங்கடம் தீரும்.
கன்னி – தைரியமான ஒரு முடிவை எடுப்பீர்கள். வெற்றிகரமான நாள். பெற்றோர் வழியில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். உங்கள் திறமை வெளிப்படும்.
துலாம் – இழுபறியாக இருந்து வந்த வேலைகள் முடிவிற்கு வரும் நாள். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் கிடைக்கும். பண விஷயத்தில் கவனம் தேவை.
விருச்சிகம் – எளிதாக முடிய வேண்டிய வேலைகளும் இழுபறியாகும். மனதில் குழப்பம் அதிகரிக்கும். ராசிக்குள் சந்திரன் இருப்பதால் உங்கள் வழக்கமான செயல்களிலும் தடுமாற்றம் ஏற்படும்.
தனுசு – வீண் அலைச்சல் அதிகரிக்கும். நெருக்கமானவர்களிடம் மனஸ்தாபம் ஏற்படும். மறைமுக எதிரிகளால் தொல்லை உண்டாகும். எதிர்பாராத செலவுவால் நெருக்கடி உண்டாகும்.
மகரம் – திட்டமிட்டு உங்கள் முயற்சியில் வெற்றி காண்பீர்கள். குல தெய்வ வழிபாடு நன்மை தரும்.
உங்களுக்கு வர வேண்டிய பணம் வீடு தேடி வந்து சேரும் நாள்.
கும்பம் – பணியாளர்களின் ஒத்துழைப்பால் உங்கள் எண்ணம் நிறைவேறும் நாள்.
நீங்கள் எதிர்பார்த்த பணம் உங்கள் கைக்கு வரும். மற்றவர் நலனில் அக்கறை காட்டுவீர்கள்.
மீனம் – குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை தீரும். புதிய சொத்து வாங்கும் முயற்சி நிறைவேறும்.
மனதில் இருந்த குழப்பம் நீங்கும். விலகிச் சென்ற உறவினர் தேடி வருவார்கள்.
