நம் நாட்டு கலைஞர்கள் உருவாக்கிய “என்ன புள்ள செஞ்ச” பாடல் காதலர் தினமாகிய நேற்று salt யூடியூபில் வெளியாகியுள்ளது.
இந்த பாடலை இசையமைப்பாளர் சகிஸ்னா சேவியர் இசையமைத்து பாடியுள்ளார். பாடகி நிர்ஜனி இணைந்து பாடியுள்ளார்.
பாடலுக்கான வரிகள் எழுதி பாடலை இயக்கி படத்தொகுப்பு செய்து இந்த புதிய கலைஞர்களை இயல்பாக நடிப்பில் மிளிர வைத்தவர் இயக்குனர் அருள்செல்வம்.
இதில் லஜந்தா குணாளன் ஆகிய இருவருமே அழகிய நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர். பாடலை தயாரித்து ஒளிப்பதிவு செய்தவர் டருன் பாஸ்கர். தற்போதைய யாழ்ப்பாண மண் வாசனை கலந்த பாடலாக இது உருவாக்கப்பட்டுள்ளது.
பாடலை முழுமையாக பார்வையிட கீழ் உள்ள லிங்கை அழுத்துங்கள்.
