நாவற்குழி திருவாசக அரண்மனை சிவதெட்சணா மூர்த்தி சிவன் கோவிலின் இவ்வருடத்திற்கான மஹா சிவராத்திரி விழா தொடர்பான ஆயத்த கலந்துரையாடல் இன்று (15) சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் ஆறு.திருமுருகன் தலைமையில் இடம்பெற்றது.
இக்கலந்துரையாடல், நாவற்குழி சிவபூமி அரும்பொருட் காட்சியகத்தில் பி.ப 2.00 மணியளவில் இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலில், சாாகச்சேரி பிரதேசசபை தவிசாளர் க.வாமதேவன், சாவகச்சேரி பிரதேசசபையின் செயலாளர், சாவகச்சேரி பொலிஸார், சாவகச்சேரி சுகாதார பணிமனையினர், நாவற்குழி கிராம அபிவிருத்திச்சங்கத்தினர், நாவற்குழி கிராம சேவையாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அத்துடன் சிவாரத்திரி தினத்தன்று ஆலய வளாகத்தில் உற்சவகால பணிமணை அமைக்கப்படும் எனவும் முடிவு செய்யப்பட்டது.
இக்கலந்துரையாடலில், இவ்வருடத்திற்கான மஹா சிவாரத்திரி நிகழ்வினை சிறப்பான முறையில் கொண்டாடுவதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மஹா சிவாரத்திரி தினத்தன்று, விசேட பூசைகள், 108 சிவலிங்கங்களுக்கும் பக்தர்கள் அபிஷேகம் செய்யும் சிறப்பு நிகழ்வுகளும் இடம்பெறுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
