யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய இளைஞன் ஒருவரையும், சுன்னாகத்தைச் சேர்ந்த 35 வயதுடைய குடும்ப பெண் ஒருவரையும் காணவில்லை என கோப்பாய் மற்றும் சுன்னாகம் பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
காதலர் தினத்தன்றே இருவரையும் காணவில்லை என இரு பொலிஸ் நிலையங்களிலும் உறவினர்களால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், இவர்கள் இருவருக்கும் இடையில் தொடர்புகள் உள்ளதா என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை மேற்க்கொண்டு வருகின்றனர்.
