மேடம் – வருமானம் அதிகரிக்கும். நினைத்ததை நிறைவேற்றி மகிழும் நாள். நிதி நிலையில் இருந்த நெருக்கடி விலகும். நீங்கள் ஈடுபடும் செயலில் முன்னேற்றம் ஏற்படும்.
இடபம் – நீங்கள் எதிர்பார்த்த பலன்களை இன்று அடைய முடியாமல் போகும். உங்கள் முயற்சியில் இன்று பின்னடைவு ஏற்படும். எதிர்பார்த்த ஒன்று இழுபறியாகும் நாள்.
மிதுனம் – குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நண்பர்கள் உதவியால் ஒரு எண்ணம் நிறைவேறும். குடும்ப உறவினர்களிடம் ஒற்றுமை உண்டாகும் நாள். மகிழ்ச்சி அதிகரிக்கும்.
கடகம் – இழுபறியாக இருந்த ஒரு செயல் உங்களுக்கு சாதகமாக முடியும் நாள். தடைகளைத் தாண்டி உங்கள் முயற்சியில் வெற்றி அடைவீர்கள். வழக்கு சாதகமாகும்.
சிம்மம் – பிள்ளைகளுக்காக மற்ற வேலைகளை ஒதுக்கி வைப்பீர்கள். உங்கள் முயற்சி வெற்றியாகும். உங்கள் செல்வாக்கு வெளிப்படும் மற்றவர்களால் சாதிக்க முடியாத ஒன்றை சாதிப்பீர்கள்.
கன்னி – உங்கள் மனம் காட்டும் வழியில் செல்வீர்கள். எதிர்பார்ப்பு நிறைவேறும்.
புதிய சொத்து ஒன்று வாங்குவீர்கள். நீங்கள் விரும்பிய வகையில் செயல்படுவீர்கள்.
துலாம் – நீங்கள் நினைத்ததை சாதித்து மகிழ்வீர்கள். செல்வாக்கு அதிகரிக்கும் நாள்.
ஒரு சில நெருக்கடி இருந்தாலும் இன்று முயற்சியால் முன்னேற்றம் காண்பீர்கள்.
விருச்சிகம் – சேமிப்பு அதிகரிக்கும். பிள்ளைகளின் எதிர்கால நலனில் அக்கறை காட்டுவீர்கள். வியாபாரத்தில் திட்டமிட்டு செயல்படுவதால் லாபம் அதிகரிக்கும். செல்வாக்கு உயரும்.
தனுசு – உங்கள் மனம் ஒரு நிலையில் இருக்காது. செயல்களில் தடுமாற்றமும் குழப்பமும் மிஞ்சும்.
செயலில் நீங்கள் எதிர்பார்த்த நன்மையை அடைய முடியாமல் போகும். எதிர்பார்ப்பு இழுபறியாகும்.
மகரம் – எதிர்பாராத செலவுகளால் சங்கடப்படுவீர்கள். வரவை விட செலவு அதிகரிக்கும். உங்கள் செல்வாக்கை வெளிக்காட்டுவதற்கு செலவு செய்யும் நாள்.
கும்பம் – நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி எளிதில் வெற்றியாகும். நிதிநிலை உயரும். பழைய முதலீட்டில் இருந்து லாபம் வரும். பொன் பொருள் சேர்க்கையில் கவனம் செல்லும்.
மீனம் – குடும்பத்தினர் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவீர்கள். பழைய பிரச்னை ஒன்று முடிவிற்கு வரும். வியாபாரத்தை விரிவு செய்ய திட்டமிடுவீர்கள். குடும்பத்தில் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.
