“தற்போது இந்திய அரசாங்கம் இலங்கைக்கு நிதியுதவி செய்கின்றது என்பதற்காக, வடபகுதி தமிழ் மக்களின் வாழ்வாதாரம் அழிவுபாதைக்கு இட்டுச்செல்வதை அனுமதிக்க முடியாது” என்று தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் யாழ்.மாவட்ட இணைப்பாளர் என்.இன்பநாயகம் தெரிவித்துள்ளார்.
யாழ்.ஊடக அமையத்தில் இன்று (16) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“கடற்தொழில் அமைச்சர் எடுத்துள்ள தீர்மானத்தை கண்டும் காணமால் இருந்தால் அது வடக்கு – கிழக்கு மக்களுக்கு செய்யும் துரோகமாகவே அமையும்.
குறுகிய நோக்கங்களுக்காக குழுவாதங்களை விடுத்து மீனவர்களின் எதிர்காலத்தினை கருத்தில் கொண்டு எடுத்துள்ள தீர்மானத்தை அமைச்சர் மீள் பரிசீலனை செய்யவேண்டும்.
வடபகுதி மக்களின் நலன்களை கருத்தில் கொண்டே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாக முடிவுகளை எடுக்கவேண்டும்” என்றார்.
