நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு 14 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டாக பிரதமர் மற்றும் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் நாட்டில் நிலவும் நிலைமை குறித்து கலந்துரையாடுவதற்காக நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு எதிர்க்கட்சிகளின் 14 பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் கையெழுத்துடன் பிரதமர் மற்றும் சபாநாயகரிடம் நேற்று (15) கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
டலஸ் அழகப்பெரும, அநுர பிரியதர்ஷன யாப்பா, விமல் வீரவங்ச, தயாசிறி ஜயசேகர, வாசுதேவ நாணயக்கார, பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், பேராசிரியர் திஸ்ஸ விதாரண, அதுரலியே ரதன தேரர், டிலான் பெரேரா, உதய கம்மன்பில, நாலக கொடஹேவா, பிரியங்கர ஜயரத்ன, பேராசிரியர் சரித ஹேரத், ஜயந்த சமரவீர ஆகியோரே கடிதத்தில் கையொப்பமிட்டுள்ளனர்.
கையொப்பமிடப்பட்ட கடிதம் சுதந்திர மக்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் திலங்க சுமதிபாலவினால் பிரதமர் மற்றும் சபாநாயகர் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
