இலங்கையை பொருத்தவரை 13ஆவது திருத்தமே தீர்வு என்பதில் இந்திய அரசு உறுதியாக இருப்பதாக பாரதிய ஜனதாக் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் கே.அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கோவை தொடர்குண்டு தாக்குதலில் உயிழந்தவர்களை நினைவுகூரும் நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இலங்கையின் வடக்கு, கிழக்கு மற்றும் மத்திய மாகாணம் என்பன இந்திய பிரதமர் நரேந்திர மோடியை நம்பி இருப்பதாகவும் அங்கு முன்னெடுக்கப்படுகின்ற அபிவிருத்திகள் அனைதையும் இந்தியாவே முன்னெடுத்து வருகிறது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் நாடாளுமன்றத்தில் 13வது திருத்ததை அமுல்படுத்துவதற்கான நேரம் வந்துவிட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் இன்னும் இரண்டு மாதங்களில் நல்ல விடயங்களை நடைபெறும்” என்றார்.
