இலங்கை – அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் நேற்று (16) நடைபெற்ற மகளிர் T20 உலகக் கிண்ண மோதலில் அவுஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி 10 விக்கெட்டுக்களால் வெற்றியைப் பெற்றுக்கொண்டது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஆஸி. மகளிர் அணித் தலைவி மெக் லன்னிங் முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தார்.
இதன்படி, முதலில் துடுப்பாடிய இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி 20 பந்துபரிமாற்றங்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 112 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
இலங்கை மகளிர் அணியின் துடுப்பாட்டம் சார்பில் ஹர்சித மாதவி அதிகபட்சமாக 34 ஓட்டங்கள் எடுத்தார்.
மறுமுனையில் ஆஸி. மகளிர் அணி பந்துவீச்சில் மெகன் ஸ்சூய்ட் 4 விக்கெட்டுக்களையும், கிரேஸ் ஹர்ரிஸ் 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.
115 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பாடிய அவுஸ்திரேலிய மகளிர் அணி விக்கெட் இழப்பின்றி 15.5 பந்துபரிமாற்றங்களில் வெற்றி இலக்கை அடைந்தது.
அவுஸ்திரேலிய மகளிர் அணியின் துடுப்பாட்டம் சார்பில் பெத் மூனி 53 பந்துகளில் 7 பெளண்டரிகள் உடன் 56 ஓட்டங்களையும், அலீஷா ஹீலி 43 பந்துகளில் ஒரு சிக்ஸர் 6 பெளண்டரிகள் அடங்கலாக 54 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழக்காது இருந்தனர்.
