ஐக்கிய மக்கள் சக்தியின் மகளிர் பிரிவின் தேசிய அமைப்பாளர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட 9 பேருக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
பொலிஸ் உத்தியோகத்தர்களின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்து கோட்டையிலுள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பில் ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட 10 சந்தேகநபர்கள் இன்று கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
சந்தேகநபர்கள் ஒவ்வொருவரையும் ஒரு மில்லியன் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட அவர்கள் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
