வாக்குச்சீட்டுக்களை அச்சிடுவதற்கான செலவுகளை பின்னர் வழங்குவதாக தேர்தல்கள் ஆணைக்குழு வழங்கியுள்ள எழுத்து மூல வாக்குறுதிக்கு இணங்க, தபால் மூல வாக்குச்சீட்டுக்களை அச்சிடத் தயார் என அரசாங்க அச்சகர் கங்கானி கல்பனா லியனகே தெரிவித்துள்ளார்.
எனினும், வாக்குச் சீட்டுக்களை அச்சிடுவதற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
வாக்குச்சீட்டுக்களை அச்சிடுவதற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்குமாறு பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட திணைக்களங்களுக்கு நான்கு கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
பொலிஸ் பாதுகாப்பின்றி, வாக்குச் சீட்டுக்கள் அச்சிடப்பட்டமை தொடர்பில் தொழிலாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், மீண்டும் வாக்குச் சீட்டுக்களை எண்ணி சான்றளிக்க வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
12 மாவட்டங்களுக்கான தபால் வாக்கு சீட்டுக்கள் அச்சடிக்கும் பணி நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
