உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான தபால்மூல வாக்கெடுப்பு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் பெப்ரவரி 22, 23, 24 மற்றும் 28 ஆகிய திகதிகளில் நடைபெறவிருந்த 2023 ஆம் ஆண்டு உள்ளூராட்சித் தேர்தலுக்கான தபால் வாக்குகளை பதிவு செய்வது ஒத்திவைக்கப்பட்டுள்ளதுடன் புதிய திகதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
