உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கு நிதி ஒதுக்காது விட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென எதிர்கட்சிகள் தெரிவித்துள்ளன.
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் திலங்க சுமதிபால, சிறிலங்கா சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர, சுதந்திர மக்கள் பேரவையின் ஜீ.எல்.பீரிஸ், டலஸ் அழகப்பெரும மற்றும் விமல் வீரவன்ச ஆகியோர் இணைந்து குறித்த கடிதத்தை அனுப்பியுள்ளன.
குறித்த கடிதத்தில், நிதியமைச்சின் செயலாளர் சிறிவர்தன அரசியலமைப்பின் 104 வது பிரிவை மீறியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு நிதி ஒதுக்காததன் மூலம் அரசியல் சாசனத்தின் 104 வது பிரிவை மீறியுள்ளீர்கள். மேலும், 02/2023 எண் 3 சுற்றறிக்கையில், ஒத்திவைக்க முடியாத விடயங்களுக்கு நிதி ஒதுக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளீர்கள். எனவே, சரிசெய்யுமாறு நாங்கள் கேட்டுக்கொள்கின்றோம். நீங்கள் தவறினால் நாங்கள் உங்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுப்போம்” என்று குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
