ஊரெழு மேற்கு ஞான வைரவர் ஆலயத்தில் மஹா சிவாரத்திரி நிகழ்வு இன்று,(18) மிகவும் சிறப்பாக ஆலய நிர்வாக சபைத்தலைவர் சி.முகுந்தன் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினர்களாக நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்நிகழ்விற்கு சிறப்பு விருந்தினர்களாக வை.தர்மகுலநாதன் (தலைவர் – றோயல் வி.கழகம்), திருமதி.சுரேஷ் கலைமகள் (பிரதேசசெலயக உத்தியோகத்தர் – கோப்பாய்) ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
கெளரவ விருந்தினர்களாக, அகிபன் (பிரதேசசபை உறுப்பினர்), இராசரத்தினம் (சமூக சேவகர்), ஜெ.கஜீபன் (தலைவர் – ஊரெழு பாரதி சனசமூக நிலையம்) ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
தொடர்ந்து சிவாரத்திரி நிகழ்வை முன்னிட்டு நடத்தப்பட்ட போட்டிகளுக்கான பரிசில் வழங்கல் நிகழ்வுகளும், மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.
