மேடம் – முன்னோர் வழிபாடு நலம் தரும். எதிர்பார்த்த வருவாய் வந்து சேரும்.
நேற்றைய முயற்சி ஒன்று நிறைவேறும். நிதிநிலை உயரும்.
இடபம் – வருவாயில் இருந்து வந்த தடை விலகும். ஈடுபடும் செயலில் லாபம் காண்பீர்கள்.
வேகமுடன் செயல்பட்டு திட்டமிட்ட செயலை செய்து முடிப்பீர்கள். உங்கள் முயற்சி வெற்றியாகும்.
மிதுனம் – அலைச்சல் அதிகரிக்கும். வருமானத்தில் தடை உண்டாகும். உத்தியோகத்தில் எதிர்ப்பு குறையும். செயலில் கவனம் தேவை.
கடகம் – வாழ்க்கைத் துணையின் உதவியுடன் தள்ளிப்போன நிகழ்ச்சியை நடத்த முயல்வீர்கள். நண்பர்களிடம் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். எதிர்பார்த்த பணம் வரும்.
சிம்மம் – உங்கள் செல்வாக்கு இன்று வெளிப்படும். நேற்றைய பிரச்னை முடிவிற்கு வரும்.
மனதில் இருந்த குழப்பம் விலகும். துணிச்சலாக செயல்பட்டு நினைத்ததை அடைவீர்கள்.
கன்னி – குல தெய்வ அருளால் உங்கள் முயற்சியில் லாபம் காண்பீர்கள். நண்பர்கள் உதவியுடன் எதிர்ப்புகளை வெல்வீர்கள். முயற்சியில் முன்னேற்றம் காண்பீர்கள்.
துலாம் – உங்கள் மதிப்பு இன்று மற்றவர்களுக்கு தெரியவரும். முயற்சியில் இலாபம் தோன்றும்.
ஆசைகளுக்கு இடம் கொடுக்காமல் செயல்பட்டு முன்னேற்றம் காணும் நாள்.
விருச்சிகம் – உங்கள் நேற்றைய எண்ணம் ஒன்று நிறைவேறும். மகிழ்ச்சியான நாள்.
எதிர்பார்த்த பணம் வரும். கடன்களை அடைப்பீர்கள். யோகமான நாள்.
தனுசு – பணம் நகைகளைக் கையாளுவதில் கவனம் தேவை. இழப்புகள் ஏற்பட வாய்ப்புண்டு.
உங்கள் எண்ணம் நிறைவேறும். நண்பர்கள் உதவியால் லாபம் காண்பீர்கள்.
மகரம் – குழப்பம் ஏற்படும். செயல்களில் கவனம் செலுத்த முடியாத நிலை உண்டாகும்.
உங்கள் மனம் விரும்பும் வகையில் செயல்படுவீர்கள். எதிர்பார்ப்புகள் குறையும்.
கும்பம் – குடும்பத்திற்காக செலவு அதிகரிக்கும். முயற்சிகளில் தடையும் தாமதமும் ஏற்படும். ஆடம்பர செலவு செய்து சங்கடத்திற்கு ஆளாவீர்கள். பணியின் காரணமாக அலைச்சல் அதிகரிக்கும்.
மீனம் – வருமானத்தில் உண்டான தடை விலகும். வர வேண்டிய பணம் வந்து சேரும்.
உங்களை விட்டு விலகிச்சென்றவர்கள் மீண்டும் வருவார்கள். செல்வாக்கு உயரும்.
