உள்ளூராட்சி சபைத் தேர்தலை இழுத்தடிக்காது விரைவாக நடத்தவேண்டும் என முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற வளாகத்தில் இன்று (21) ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
திட்டமிட்டபடி தேர்தலை நடத்த வேண்டும் என்றே தமது கட்சி கருதுவதாக அவர் தெரிவித்தார்.
தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக யார் சொன்னது? தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதில் தாங்கள் உறுதியாக உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
