காலமான யாழ்.பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும் பேராசிரியருமான ரட்ணம் விக்னேஸ்வரனின் இறுதிக் கிரியைகள் இன்று (20) இடம்பெற்றது.
யாழ்.பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கத்தில் இடம்பெற்ற அஞ்சலி நிகழ்வில் துணைவேந்தர், பேராசிரியர்கள், துறைத்தலைவர்கள், விரிவுரையாளர்கள், பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள், மாணவர்கள் , அரசியல் பிரமுகர்கள் பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டு தமது அஞ்சலிகளை செலுத்தினார்கள்.
இதன்போது, யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகளால் சிவப்பு, மஞ்சள் கொடி போர்த்தப்பட்டு கௌரவம் வழங்கப்பட்டது.
