“காட்டில் வாழுகின்ற மிருகங்களில் மிகவும் தந்திரமானது நரி அதேபோன்று இலங்கையில் வாழுகின்ற மிகவும் தந்திரமான மனிதர் என்றால் அது ரணில்” என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (23) உரையாற்றும் போதே சிறிதரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடைபெறாது என்பது நாடாளுமன்றத்தில் இன்று ஜனாதிபதி ஆற்றிய உரையின் மூலம் தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரணிலிடம் சரியான நேர்மையான ஜனநாயகமான வார்த்தைகளை எதனையும் அவதானிக்க முடியவில்லை.
ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் அடிக்கடி பேசிக்கொள்வதன் மூலம் நாட்டில் ஏதாவது நடந்து விடுமென ரணில் நினைக்கின்றார்.
நாட்டின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எவ்வாறு பிறந்தார் என ஆண்டவனே சிலவேளைகளில் யோசிப்பதாகவும் அவ்வளவு தூரம் அவரின் செயற்பாடுகள் அமைந்துள்ளது.
கௌரவமான மக்களின் வாழ்க்கை இலங்கையில் அடகு வைக்கப்பட்டுள்ளது. வெறும் வாய்வார்த்தைகள் மூலமும் நாணயத்தாள்களை அச்சிடுவதன் மூலமும் எதனையாவது செய்யமுடியும் என ரணில் நினைக்கிறார்” – என்றார்.
