“மக்களுக்கு பிரச்சினையின்றி தொடர்ந்து மின்சாரம் வழங்குவதுதான் எதிர்கட்சியினருக்கு பிரச்சினையா? என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (23) விசேட உரை நிகழ்த்தும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“தேர்தலை பிற்போடுவது எனது எண்ணம் இல்லை. நடைபெறாத தேர்தலை எவ்வாறு பிற்போடுவது.
மேலும், தற்போதைய சூழ்நிலையில் தேர்தலொன்றை நடத்துவதற்கு நாட்டின் பொருளாதாரம் சீராக இல்லையெனவும், தேர்தலுக்கான நிதி இல்லையெனவும் கடந்த டிசம்பர் 14ஆம் திகதி தேர்தல் ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளது.
இன்று அத்தியாவசிய சேவைகள் தொடர்பில் வாக்களிப்புக்கு செல்வதாக எதிர்கட்சிகள் தீர்மானித்துள்ளன. ஏன் இவ்வாறு செய்கிறீர்கள், மக்களுக்கு பிரச்சினையின்றி தொடர்ந்து மின்சாரம் வழங்குவதுதான் உங்களுக்கு பிரச்சினையா?” என்றார்.
