யாழ்.போதனா வைத்தியசாலையில் மருத்துவ கழிவுகளை வெளியேற்ற முடியாமல் கழிவுகள் வைத்தியசாலைக்குள் தேங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவ கழிவுகள் தெல்லிப்பழை வைத்தியசாலையில் எரியூட்டப்பட்டு வந்தது.
இந்நிலையில், யாழ்.மாநகரசபைக்கு உட்பட்ட கோம்பயன் மடம் பகுதியில் எரியூட்டல் தொகுதியை நிறுவுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட நிலையில், அது தற்போது தடைப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக யாழ்.போதனா வைத்தியசாலையின் மருத்துவ கழிவுகள் லொறிகளில் ஏற்றப்பட்ட நிலையில், வைத்தியசாலை வளாகத்தில் தேங்கி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
