தேர்தல் ஆணைக்குழு சட்டப்பூர்வமாக தேர்தலுக்கு அழைப்பு விடுக்கவில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று விசேட உரையாற்றிய போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், தற்போது தேர்தலை நடத்துவதற்கான நிதி அரசாங்கத்திடம் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
