புலனாய்வு பிரிவைச் சேர்ந்த பாதுகாப்பு உத்தியோகத்தர் என அறிமுகப்படுத்திக் கொண்டு வீட்டுக்குள் உள்நுழைந்தவர் 38 பவுண் நகைணை திருடிச்சென்றுள்ள சம்பவம் பதிவாகியுள்ளது.
கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்வியங்காட்டு பகுதியில் வயோதிப தம்பதியினர் வசித்து வரும் வீடொன்றில் நேற்று (28) குறித்த நபர் தன்னை புலனாய்வு பிரிவை சேர்ந்தவர் என அடையாளப்படுத்திக்கொண்டு, வயோதிப தம்பதியினரிடம் விசாரணைகளை முன்னெடுப்பது போன்று பாசாங்கு செய்துள்ளார்.
பின்னர், வீட்டினை சோதனையிட வேண்டும் எனத்தெரிவித்து வீட்டினுள் சென்று அலுமாரிகளை சோதனையிட்டு அங்கிருந்த 38 பவுண் நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளார்.
சம்பவம் தொடர்பில் வயோதிப தம்பதியினர் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ள நிலையில், பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
