8 வயதுடைய சிறுமி ஒருவரை இரண்டு மாதங்களாக பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் 70 வயதான தேரர் ஒருவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்க்கொள்ளப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்த விசாரணைகளை ஹெட்டிப்பொல பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
சந்தேகநபரான குறித்த பௌத்த பிக்கு இரண்டு மாதங்களாக சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதேவேளை, தற்போது குறித்த தேரர் தலைமறைவாகியுள்ள நிலையில் அவரைத் தேடும் பணிகளில் பொலிஸார் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
