எதிர்வரும் 8ஆம் திகதி தொடக்கம் தொடர்ச்சியான போராட்டம் ஒன்றை நடத்தவுள்ளதாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் தலைவர் சதானந்தன் தெரிவித்தார்.
தொழிற்சங்கங்கள் ஆரம்பித்துள்ள தொழிற்சங்க போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இன்று (01) மட்டக்களப்பு நகரில் கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது கருத்து தெரிவாக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“49 தொழிற்சங்கங்கள் ஒன்று சேர்ந்து இன்று நாட்டை முடக்கியுள்ளோம்.
இந்த நடவடிக்கை அரசாங்கத்திற்கான முன் எச்சரிக்கை.
தங்கள் மீது சுமத்தப்பட்டுள்ள நியாயமற்ற வரிச்சுமைக்கு எதிராகவே தாம் போராடுகின்றோம்.
இது கவலைக்குரிய விடயமாக இருந்தாலும் அதியுச்ச நடவடிக்கை 8 ஆம் திகதி தொடக்கம் தொடர்ந்து வேலை நிறுத்த போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம்.” என்றார்.
