விரைவில் பிரபாகரனுடைய காணொளி வெளியில் வரலாம் எனவும், அத்துடன் அவரது மனைவி மற்றும் மகள் அல்லது பொட்டமான் போன்றோர் களமிறங்கலாம் என ஓய்வு பெற்ற இந்திய இராணுவத் தளபதி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலின் போதே அவ்வாறு மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
“2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற யுத்தத்தில் இறுதி 3 நாட்களும் அவர் இறப்பதற்கான வாய்ப்பு அதிகமாக இருப்பினும் இந்தியாவின் இறுதி முயற்சியாக அவருடைய குடும்பத்தினை அதிலிருந்து வெளியில் கொண்டு வர வேண்டும் என்ற பேச்சுவார்த்தை இருந்தது என்பது இப்பொழுது பல தருணங்களில் வெளியிடப்பட்டுள்ளது.
இதனால் அவரை வீரமற்றவர் என குறை முடியாது. ஒரு கட்டத்தில் பிரிட்டிஷ் அதிகளவாக தாக்கி படையெடுக்கும் பொழுதும் நேர்தாஜி பின்வாங்கி நடைப்பயணமாக சிங்கப்பூர் சென்றதும் நாம் அறிந்ததே.
ஆகவே, பிரபாகரன் அவர்கள் தமிழ் நாட்டில் சிலர் அவர் கோழையன்று , ஓடி இருக்க மாட்டார் என்று கூறுவது அவர்களுடைய உணர்வு சார்ந்தேயாகும்.
அவர் இறந்தமைக்கான சான்று உரிய முறையில் ஆவணப்படுத்தப்படவில்லை. அத்துடன், அவர் இறந்ததாக காட்டப்பட்ட விதமும் அதற்கான குற்றப்புலனாய்வு அறிக்கையும் வெளியிடப்படவில்லை.
மேலும், பிரபாகரன் இறந்து விட்டமையினை DNA பரிசோதனை செய்து நிரூபித்தததாக இன்று கூறும் இலங்கை அரசு அதனை ஏன் 14 வருடங்களிற்கு முன்னர் குறிப்பிடமால் இருந்தது என்பது சந்தேகமே.
பழநெடுமாறன் மட்டுமன்றி தமிழகத்திலுள்ள பலரும் புலிகள் அமைப்பிலிருந்தோர் வெளிநாடுகளில் உயிருடன் இருப்பதாக அன்று முதல் இன்று வரை கூறி வருகின்றனர்.
ஆனால், அப்பொழுது பதில் வழங்காத இலங்கை அரசு இப்பொழுது பதில் கூறியுள்ளமையும் கேள்விக்குறியாகவே உள்ளது.
அத்தோடு பிரபாகரன் என காட்டப்பட்ட உடலில் பெயர் குறிப்பிடப்பட்ட சின்னம் அணிந்து காணப்பட்டது .எந்தவொரு போர் வீரனும் போர் களத்தில் தன்னுடைய பெயரினை அடையாளப்படுத்தமாட்டான்.
ஆகவே , பிரபாகரன் உயிருடன் தான் உள்ளார். அவர் உயிரோடு உள்ளதினை நிரூபிக்கவும் மற்றும் ஈழத்தமிழர்களிற்கு உரை நிகழ்த்தவும் அந்த காணொளி வெளியிடப்படவுள்ளதாக தகவல்கள் கசிகின்றன.
நாளைக்கு பிரபாகரனே காணொளி வெளியிட்டாலும் , தமிழகத்திலோ அல்லது சென்னையிலோ நேராக வந்து நின்றாலும் அது அவரில்லை என்று கூறுவதற்கான சூழ்நிலைகள் உருவாக்கப்பட்டுள்ளது.
அவர் இருக்கிறார் இல்லை என்பதனை தாண்டி அவரினால் இந்த பிரச்சினைகளிற்கான தீர்வு கிடைக்குமாயின் அது வரவேற்கத்தக்கதே.
ஆயுத போராட்டத்திற்கும், விடுதலைப் புலிகள் என்ற கட்சி வருவதற்கும் இனி வரும் காலத்தில் வாய்ப்பில்லை. ஆனால் இருக்கும் அரசியல் கட்சிகள் யாவும் ஒன்றிணைந்து ஒரு அமைப்பாகவோ அல்லது புதிய ஒரு கட்சி மூலமாகவோ அவர் வருவதற்கான வாய்ப்புக்களுண்டு.
மேலும், அவருடைய மனைவி, துவாரகா போன்றோர் உயிருடன் இருப்பதற்கான வாய்ப்புகளும் அதிகம். அவர்கள் கீழான தலைமைத்துவமும் ஒற்றுமையினை நோக்கியே பயணிக்கும்” எனவும் தெரிவித்துள்ளார்.
