இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் மண்ணெண்ணெயின் விலை குறைக்கப்படவுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
அதனடிப்படையில், ஒரு லீட்டர் மண்ணெண்ணெயின் விலை 50 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது.
அதற்கமைய 355 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட மண்ணெண்ணெய் ஒரு லீட்டரின் புதிய விலை 305 ரூபாவாகும்.
இதேவேளை, தொழிற்துறைகளுக்கு பயன்படுத்தும் மண்ணெண்ணெய் ஒரு லீட்டர் 134 ரூபாவால் குறைக்கப்படவுள்ளது. அதற்கமைய 464 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட தொழிற்துறைகளுக்கு பயன்படுத்தும் மண்ணெண்ணெய் ஒரு லீட்டரின் புதிய விலை 330 ரூபாவாகும்.
