“தமிழக மீனவர்களுக்கு எதிராக வடக்கு மீனவர்களை தூண்டி விட்டிருந்த அமைச்சர் அண்மையில் அடிப்பதற்கு ஒரு படகு இடிப்பதற்கு ஒரு படகு தருவதாக தெரிவித்தார்” என யாழ் மாவட்ட மீனவர் சம்மேளன இணையத்தின் தலைவர் சுப்பிரமணியம் தெரிவித்தார்.
யாழ் ஊடக அமையத்தில் இன்று (01) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“வடக்கு மீனவர்களுக்கு துணிவு இருந்தால் இந்திய மீனவர்களை பிடித்து வருமாறு முதலாவதாக அமைச்சர் கூறியிருந்ததாகவும் அதனையும் பிடித்து கொடுத்திருந்தோம்.
அதன் பின்னர் இந்திய மீனவர்களை அடித்து விட்டு வருமாறு தெரிவித்தார். அதன் பின்னர் இந்திய மீனவர்களுக்கு அடித்து, அடியும் வாங்கினோம்.
இவ்வாறு கூறி வந்த அமைச்சர் இன்று தலைகீழாக மாறி தமிழக நாட்டுப்படகு உரிமையாளர்களுக்கு இந்த கடலை தாரைவார்த்துக் கொடுத்துள்ளார்.
தற்போது கச்சதீவிலே இந்திய இலங்கை மீனவர்களுக்கான பேச்சுவார்தை என்ற போர்வையில் மீனவர்களை அமைச்சர் அழைத்துச் செல்கின்றார்.
இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொள்பவர்கள் கடலுடன் தொடர்புடையவர்கள் அல்ல” என்றார்.
