கிரீஸ் நாட்டின் ஏதேன்சில் இருந்து திஸ்லனொய்கி நகருக்கு நேற்று (01) 350 பயணிகளுடன் பயணித்த புகையிரதம் லரிசா நகரின் தெம்பி பகுதியில், அதே தண்டவாளத்தில் வேகமாக வந்த சரக்கு புகையிரதத்துடன் நேருக்கு நேர்மோதி பெரும் விபத்து ஏற்பட்டது.
இரு புகையிரதங்களும் நேருக்கு நேர் மோதியதில் பயணிகள் புகையிரதத்தின் சில பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து கவிழ்ந்து தீயில் பற்றி எரிந்தது.
இவ்கோர விபத்தில் 29 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 85 பேர் காயமடைந்துள்ளனர்.
