நாட்டில் அடுத்துவரும் நான்கு வருடங்களில் 330 புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களை நடைமுறைப்படுத்தவுள்ளதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் தேசிய மின் உற்பத்திக்கு 2300 மெகாவோட் மின்சாரத்தை சேர்க்கும் சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
மினசக்தி எரிசக்தி அமைச்சில் நேற்று (01) இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்ட தகவலை தெரிவித்துள்ளார்.
